1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 25 ஆகஸ்ட் 2018 (19:21 IST)

தி.மு.க ஆட்சி காலத்தில்தான் கரெப்ஷன், கலெக்‌ஷன் எல்லாம்: துணை சபாநாயகர் தம்பித்துரை

தி.மு.க ஆட்சி காலத்தில்தான் கரெப்ஷன், கலெக்‌ஷன் எல்லாம் நடந்தது ! அ.தி.மு.க ஆட்சியில் இல்லை ! முக்கொம்பு அணை உடைந்ததற்கும் மணல் அள்ளியதற்கும் சம்பந்தம் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை தெரிவித்துள்ளார்.



கரூர் மாவட்டத்தில், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட வீரராக்கியம், ரயில்வே ஸ்டேஷன், சின்னாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களவை துணை சபாநாயகரும், கரூர் எம்.பி யுமான தம்பித்துரை, பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர், முன்னதாக, கரூர் மருத்துவக்கல்லூரி வளாகம் கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு செய்ததாகவும், பின்னர் கிராமங்கள் தோறும், பொதுமக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, நானும் (தம்பித்துரை) அதிகாரிகளும் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது ஊழல் குற்றச்சாட்டு விடுத்ததோடு, அவரை ராஜிநாமா செய்யவும், தி.மு.க உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருவதை கேட்டதற்கு, அது அரசியல், ஏனென்றால் ஆளுங்கட்சியை, எதிர்கட்சிகள் பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுவது இயல்பு.

நேற்று கூட முக்கொம்பு பகுதியில் பாதிக்கப்பட்ட இடத்தினை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார். மேலும் முதல்வருக்கு எந்த பயமும் இல்லை, என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார் என்று கூறினார்.

மேலும் இடைத்தேர்தல் வேண்டாம் என்று நான் சொல்ல வில்லை, மேலும் அப்படி நான் எங்கு சொன்னேன் என்று ஆவேசமடைந்த தம்பித்துரை தமிழகத்திற்கு இடைத்தேர்தல் இப்போது வேண்டாம், அது நான் சொன்னது எதிர்காலத்திற்கு, இன்றையை காலத்தில் இடைத்தேர்தல் வேண்டும்,

ஆகவே, நாடாளுமன்றத்தேர்தலின் போது சட்டமன்ற தேர்தல் நடத்த கூடாது என்றும், மேலும், தமிழகத்தில் வரும் வருடம் மக்களவை தேர்தல் வரும் போது, சட்டசபை தேர்தல் வந்தால், இரு வருடம் தான் மாநிலத்தில் ஆட்சி முடிந்துள்ளது அதே போலதான் மற்ற மாநிலத்திலும் ஒரு ஆண்டு தான் ஆட்சி முடிந்த நிலையில், ஒரே தேர்தல், ஒரே நாடு திட்டம் வந்தால் மற்ற மாநிலங்களில் அது நடைமுறைப்படுத்த வேண்டாம் என்றார்.

மேலும், மணல் கொள்ளையால் தான் முக்கொம்பு அணை அடித்து செல்லப்பட்டது என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர் என்று கேட்டதற்கு, மணல் கொள்ளைக்கும், அணை உடைந்ததற்கும் சம்பந்தமும் இல்லை, மேலும் மணல் அள்ளுவதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் உள்ளது என்றார்.

மேலும், தி.மு.க ஸ்டாலின் தமிழ்நாடு அரசினை பற்றி கலெக்சன், கரெப்ஷன் என்று புகார் தெரிவித்தார். அது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கரெக்‌ஷன், கரெப்ஷன் எல்லாம் தி.மு.க ஆட்சி காலத்தில் நடந்ததை தான் சொல்கின்றார்

ஏனென்றால் சர்க்காரியா கமிஷன் முதல், 2 ஜி ஸ்பெக்ட்ரம் வரை எல்லாம் மக்களுக்கு தெரியும், எல்லாமே, கீழ் மட்டத்தில் இருந்து விடுதலை பெற்றாலும் இன்றும் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் சென்று கொண்டுள்ளது என்றார். இது மக்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும் என்றார்.