புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : திங்கள், 13 ஏப்ரல் 2020 (14:20 IST)

அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று

தமிழகத்தில் தினந்தோறும் கொரோனாவுக்கு 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 106 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மொத்தம் தமிழகத்தில் 1075 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கோவை  மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கோவை மாவட்டத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை  அளித்த  2 மருத்துவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் பணியில் இருந்த 20 மருத்துவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.