இன்று மேலும் 526 பேருக்கு கொரோனா…சென்னையில் மட்டும் 279 பேர் பாதிப்பு !!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 62,000ஐ தாண்டிள்ளது. எனவே இந்தியாவில் மொத்தமாகக் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 2,000ஐ தாண்டியுள்ளது.
.இன்று தமிழகத்தில் 526பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் இன்று 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மாநிலதலைநகர் சென்னையில் மொத்தம் 3330 பேர் பாதிக்கப்பட்டுள்ளானர். மாநிலம் முழுவதும் 6535 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 17,846 பேர் கொரோனாவில் இருந்து குணம்பெற்றுள்ளனர். இன்றுமட்டும் 219 பேர் குணம்பெற்று வீடு திரும்பினர். இன்று 12,999 பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மொத்தம் 39,824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடலூரில் - 3294 பேரும், அரியலூரில் – 271 பேரும், திருப்பூரில் 290 பேரும், செங்கல்பட்டில் 224 பேரும் சென்னையில் - 279 பேர், விழுப்புரம் - 67 பேர், செங்கல்பட்டு - 40 பேர் ,பெரம்பலூர் - 31 பேர் ,திருவள்ளூர் - 26 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.