வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 7 ஏப்ரல் 2020 (14:12 IST)

பினிக்ஸ் மால் தொடர்புடைய 3,200 பேருக்கு கொரோனா பாதிப்பு இல்லை – மாநகராட்சி ஆணையர்

அரியலூரில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர் சென்னையில் உள்ள பீனிக்ஸ் மாலில் பணிபுரிந்து வந்தவர் என்பதை அறிந்த சுகாதாரத்துறையினர் தொடர்ந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவருடன் பணியாற்றிய சக ஊழியருக்கும் கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை பீனிக்ஸ் மாலில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட தாக அதனுடன் தொடர்புடைய 3,200 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது : சென்னையில் வீடு வீடாகச் சென்று 3 வது நாளாக  நடைபெற்று வருகிறது.
சென்னையில் 16 ஆயிரம் பேர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாக்வும் தெரிவித்தார். சென்னையில் 43 இடங்களில் கொரோனா பரவும் இடங்கள் கண்டறியப்பட்டு மூடப்பட்டுள்ளது , அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மொத்தம்  9 லட்சம் எனக் கூறினார்