குழந்தைகளுக்கான கொரொனா தடுப்பூசி
சைடுஸ் காடிலா என்ற நிறுவனம் சைகோ- வி- டி என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. இந்த மருந்தை குழந்தைகளுக்குப் பயன்படுத்த முடியும் எனவும், மத்திய அரசு அவசர காலப் பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது.
அடுத்த மாதம் இந்நிறுவனம் மத்திய அரசிற்கு இம்மருந்துகளை விநோய்கம் செய்யும் எனவும், அதனையடுத்து, இந்தியாவில் குழந்தைகளுக்கு கொரொனா தடுப்பூசி போடப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
விரைவில் கொரொனா 3 வது அலை பரவும் எனவும் இது குழந்தைகளை அதிகம் பாதிக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இம்மருந்து மக்களுக்கு நம்பிக்கையும் தைரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.