வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (08:17 IST)

தஞ்சையில் மேலும் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 
 
தஞ்சையில் உள்ள பள்ளியில் மேலும் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் 21 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் 6 மாணவிகளுக்கு என மொத்தம்  என 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.