வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 2 ஜனவரி 2022 (15:00 IST)

சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடு அறை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் நேற்று ஆயிரத்து 400 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குறிப்பாக சென்னையில் நேற்று 589 பெயர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதையடுத்து சென்னையில் மீண்டும் கொரோனா வைரஸ் கட்டுப்பாடு அறை தொடங்கப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தன்னார்வலர்கள் உடன் இணைத்து கொரோனா கட்டுப்பாட்டு அறை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரிப்பன் மாளிகையில் தொடங்கும் இந்த பணிகள் விரைவில் முடிவடைந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்