வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2024 (20:59 IST)

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

SP Velumani
டெண்டர் முறைகேடு புகாரில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது  லஞ்ச ஒழிப்புத்துறை ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.
 
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில் சென்னை மாநகராட்சியில் கடந்த 2018 ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி வேலுமணி  26.61 கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக, அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியது.  
 
மழைநீர் வடிகால் அமைக்க 290 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், சாலைகள் அமைப்பதற்காக 246 கோடி ரூபாயிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.  இவற்றில் ஒப்பந்தாரர்களை முடிவு செய்வதில் விதிமீறல் நடந்துள்ளதாகவும், எஸ்.பி.வேலுமணி மற்றும் அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும், அதன் மூலம் 26.61 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.


இந்த புகாரை விசாரித்த லஞ்ச ஒழிப்புத்துறை, முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சென்னை மாநகராட்சி செயற்பொறியாளர் முருகன், கண்காணிப்பு பொறியாளர் சின்னச்சாமி, செயற்பொறியாளர்கள் சரவணமூர்த்தி, பெரியசாமி, சின்னதுரை, நாச்சன், முன்னாள் செயற்பொறியாளர் சுகுமார், கண்காணிப்பு பொறியாளர் விஜயகுமார், தலைமை பொறியாளர் நந்தகுமார், முதன்மை பொறியாளர் புகழேந்தி உள்ளிட்டோர் மீது ஊழல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.