அதிமுக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் கூட்டணியா அல்லது பாஜக தலைமையில் கூட்டணியா என்ற பரபரப்பும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியா அல்லது பாஜக தலைமை கைகாட்டும் நபரா என்ற குழப்பம் இருந்து வருகிறது
இந்த நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இன்று தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்
சட்டப்பேரவை தேர்தலில் எடப்பாடி தொகுதி மக்கள் என்னை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறிய முதல்வர் பழனிசாமி மக்களவைத் தேர்தலின்போது கூட்டணியில் இருந்த கட்சிகளே தற்போதும் கூட்டணிகள் தொடர்கின்றன என்றும் அதில் எந்தவிதமான மாறுபாடும் இல்லை என்றும் அவர் கூறினார்
கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூட்டணி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் முதல்வர் கூறினார். மேலும் சசிகலா வருகையால் அரசியலில் எந்தவித மாற்றமோ ஏற்படாது என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்