வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (20:28 IST)

குடியுரிமை திருத்த சட்டம் அமல்.! காங்கிரஸ் கண்டனம்..!!

Selvaperundagai
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது  கண்டிக்கத்தக்கது இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
 
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை,  இந்திய மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
 
குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி இருப்பது  கண்டிக்கத்தக்கது என்றும் ஆர்.எஸ்.எஸ் கொடுக்கும் திட்டங்களை பாஜக தொடர்ந்து அமல்படுத்தி வருகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
 
இந்தியாவில் சிறுபான்மை மக்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்பதற்காகவே சிஏஏ சட்டத்தை மத்திய பாஜக அரசு அமல்படுத்தி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
 
சிறுபான்மை மக்களை இந்தியாவை விட்டு வெளியேற வைப்பதற்கான தொடர் அச்சுறுத்தல்களை மத்திய பாஜக அரசு செய்து வருகிறது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவில் பிறந்த யாரும் இந்த நாட்டின் குடியுரிமைப் பெறலாம் என்பதற்கு எதிராக சிஏஏ சட்டம் உள்ளது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.