முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் உயிரிழப்பு!
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் முதல்வர் அலுவலக தனிச்செயலாளர் கொரோனாவால் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலேயே அதிகமான பாதிப்புகள் உள்ள மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முக்கியமாக சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. சமீபத்தில் திமுக அரசியல் பிரபலம் கொரோனாவால் உயிரிழந்த நிலையில் மேலும் பல அரசியல்வாதிகள், மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தமிழக முதல்வர் அலுவலகத்தில் தனிச்செயலாளராக பணிபுரிந்து வந்த தாமோதரன் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்துள்ளார்.