திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருக்கு கொரோனாவா? அதிர்ச்சி தகவல்
திமுக இலக்கிய அணி இணைச்செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி காலமானார் என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் அதிமுக எம்.எல்.ஏ பழனி என்பவருக்கும் அவருடைய மனைவி, மகளுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை தியாகராய நகர் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், திமுக இலக்கிய அணி இணைச்செயலாளருமான வி.பி.கலைராஜன் அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளதாகவும், இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் அரசியல்வாதிகளும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது