திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 9 நவம்பர் 2018 (15:00 IST)

சென்னைவாசிகளுக்கு ஷாக் நியூஸ்.. சிட்டிக்கு மழை இல்லயாம்

நவம்பர் மாதம் முதல்தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், அறிவிப்பு வெளியான உதல் இரண்டு நாட்களுக்கும் மட்டும் நல்ல மழை பொழிந்தது. அதன் பின்னர் மழைக்கான அறிகுறி கூட தெரியவில்லை. 
 
இந்நிலையில், மழை குறித்த செய்தியை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதாவது, தாய்லாந்து வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள மலையடிவாரத்தில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது அந்தமான் பகுதியில் நிலவிவருகிறதாம். 
 
அடுத்து மூன்று தினங்களில் இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்ற புயலாக மாற வாய்ப்புள்ளதாம். இதனால் நாளை முதல் 13 ஆம் தேதி வரை அந்தமான் பகுதியில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தூத்துக்குடி, திருச்சந்தூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாம். அதோடு, சென்னைக்கு தற்போது சுத்தமாக மழைக்கான வாய்ப்பு இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.