அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக தமிழகத்திலும் புதுவையிலும் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ஆகிய பகுதிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் மழை பெய்யும் என்றும் மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை காணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னையை பொருத்தவரை அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது