ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (08:32 IST)

அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு!

rain
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது தமிழகத்தின் மழை நிலவரம் குறித்து தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் இந்திய பெருங்கடலின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதியில் காற்றழுத்து தாழ்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்த காற்றழுத்து தாழ்வு வலுப்பெற்று நகரும் என்பதால் தமிழகத்தின் கடற்கரை ஓர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த அறிவிப்பு ஒன்றில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என தெரிவித்துள்ளது
 
இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய ஏழு மாவட்டங்களில் இன்னும் சில மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva