திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 28 ஜனவரி 2023 (19:03 IST)

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்குப் பகுதிகளில்  காற்றழுத்தத் தாழ்வு நிலவுவதால், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்குத் திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வாக வலுவடையும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்தத 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும், என்றும்,  நாளை வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

நாளை முதல் பிப்ரவரி 1 ஆம் தேதிவரை 4 நாட்களுக்கு  லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்துள்ளது.