புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 9 மே 2020 (08:18 IST)

சென்னையில் ஒரேநாளில் மேலும் இருவர் பலி! – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை!

சென்னையில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முக்கியமாக சென்னையில் பாதிப்புகள் அதிகமாக உள்ளன. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் 3 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று மேலும் இருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 64 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். சென்னையில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வந்த நிலையில் தற்போது பலிகளும் அதிகரித்து வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.