புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (09:10 IST)

இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு புதிய கொரோனா?! – மக்கள் அதிர்ச்சி!

இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் புதிய வகை வீரியமான கொரோனா வைரஸ் பரவி வருவதால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முன்னதாக இங்கிலாந்திலிருந்து சென்னை வந்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இங்கிலாந்தில் இருந்து டெல்லி வந்த நபர் அங்கிருந்து உள்ளூர் விமானம் மூலமாக சென்னை வந்துள்ளார். இதனால் வீட்டு தனிமையில் இருந்த அந்த நபர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அவரது சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அவருக்கு வழக்கமான கொரோனாவா? அல்லது வீரியமிக்க புதிய கொரோனாவா? என்பது ஆய்வு முடிவுகளுக்கு பிறகே தெரியும் என்ற நிலையில், அவருடன் விமானத்தில் பயணித்த நபர்களை ட்ராக் செய்யவும் முயற்சிகள் நடந்து வருவதாகவும், இங்கிலாந்தில் பரவும் கொரோனா குறித்து தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் சென்னையில் பதற்றம் எழுந்துள்ளது.