திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 டிசம்பர் 2020 (08:11 IST)

புதிய வகை கொரோனா ஏற்கனவே உலகம் முழுக்க பரவியிருக்கலாம்! – ஹூ மூத்த விஞ்ஞானி!

லண்டனில் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில் அது ஏற்கனவே உலகம் முழுவதும் பரவியிருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இத்தாலிக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற இருவருக்கும் இந்த வைரஸ் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் லண்டனை தொடர்ந்து ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் “புதிய கொரோனா வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவி வருவதை சமீபத்திய ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இதனால் ஏற்கனவே உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவியிருக்கலாம்.” என்று கூறியுள்ளார்.