திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 12 ஜனவரி 2020 (09:39 IST)

இந்தியாவுலயே சென்னை ஐஐடி தான் ஃபர்ஸ்ட்டு??

இந்தியாவில் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐஐடி நிறுவனம் பிடித்துள்ளது.

நாட்டின் சிறந்த 100 கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட இந்த பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகம் 14 ஆவது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 21 ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

அதே போல் நாட்டின் சிறந்த 200 பொறியியல் நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 9 ஆவது இடத்தையும், திருச்சி NIT 10 ஆவது இடத்தையும், SRM நிறுவனம் 36 ஆவது இடத்தையும் பிடித்துள்ளது.