திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஜனவரி 2020 (13:33 IST)

செய்திகள் வாசிப்பது திரு எச்.ராஜா... நெட்டிசன்கள் கலாய்!!

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு செய்திகளை வெளியிட்டுள்ளார். இதனை டிவிட்டர்வாசிகள் விமர்சித்து வருகின்றனர். 
 
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கூட்டமொன்றில் நெல்லை கண்ணன் பேசியதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.  இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 
 
இதனை அடுத்து நெல்லை கண்ணன் தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை  நடைபெற்ற போது,  கடந்த 3 ஆம் தேதி நெல்லை கண்ணனின் ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது .  
 
இதனைத்தொடர்ந்து நேற்று நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்கி நெல்லை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் இரண்டு செய்திகளை போஸ்ட் செய்துள்ளார். அவை பின்வருமாறு...  
 
செய்தி 1
இந்து முன்னணி நிர்வாகி பாடி சுரேஷ் கொலைவழக்கில் ஜாமினில் வந்து தலைமறைவான பயங்கரவாதிகள் 2 பேர் டில்லியில் கைது. மூன்றாவது நபர் களியக்காவிளை SSI கொலையில் தேடப்படும் குற்றவாளி.
 
செய்தி 2
மாண்புமிகு பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொன்ன நெல்லை கண்ணனுக்கு ஜாமின்.
 
இதை கண்ட டிவிட்டர்வாசிகள் எச்.ராஜா கலாய்ப்பதோடு விமர்சித்தும் வருகின்றனர். மேலும் செய்து 3, செய்தி 4... என தங்களது விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.