புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 4 அக்டோபர் 2019 (11:06 IST)

தமிழக அரசு அபராதத்தை குறைக்குமா? முட்டுக்கட்டை போடும் நீதிமன்றம்!

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு எவ்வாறு கையாள போகிறது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 
 
போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காகவும், வாகன விபத்துக்களை குறைக்கவும் அதிக அபராதத்தை விதித்து புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை அமல்படுத்தியது. மத்திய அரசு விதித்துள்ள அபராத விதிகளை மாநில அரசுகள் குறைத்துக்கொள்ளலாம் என்று மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துவிட்டார். 
 
இதனையடுத்து உத்தரகாண்ட், உத்திரபிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அபராத தொகையை குறைப்பதாக தெரிவித்தது. தமிழ்நாட்டிலும் அபராத தொகௌ குறைக்கப்படலாம் என தெரிகிறது. இந்த சூழ்நிலையில், பைக் டாக்ஸிக்கு அனுமதி கோரி தமிழக அரசு நீதிமன்றத்தை நாடியது. 
 
இந்த கோரிக்கையின் மீதான விசாரணையின் போது புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை தமிழக அரசு அமல்படுத்த உள்ளதா அல்லது அதற்கான அபராதத்தை குறைத்து சட்டதையே நீர்த்து போக செய்யும் வகையில் செயல்படுத்த உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளது.