மாஸ்க் அணியாத மக்கள்; ஒரே நாளில் ரூ.2 லட்சம் வசூல்! – சென்னை மாநகராட்சி அதிரடி!
சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமடைந்து வரும் நிலையில் மாஸ்க் அணியாதவர்களிடமிருந்து ஒரே நாளில் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா வேரியண்டான ஒமிக்ரான், டெல்டா ஆகியவை வேகமாக பரவத் தொடங்கியுள்ளன. முக்கியமாக தலைநகரான சென்னையில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகின்றது. இதனால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக கடைபிடிக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நேற்று சென்னையின் பல பகுதிகளில் மாஸ்க் அணியாமல் சென்ற மக்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டது. நேற்று ஒருநாளில் மட்டும் மாஸ்க் அணியாமல் சென்றவர்களிடம் ரூ.2.18 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதம் வசூலிக்கப்படுவதால் மக்கள் மாஸ்க் அணிவதில் விழிப்புணர்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.