முகக்கவசத்துக்கு 200, எச்சில் துப்பினா 500 அபராதம்! – சென்னையில் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் சென்னையில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தினசரி கொரோனா பாதிப்புகள் 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் அதிகம் கொரோனா பரவும் மாநிலங்களில் தமிழகமும் உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் தமிழகம் முழுவதற்கும் புதிய கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு பொறுத்து மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை அறிவிக்கவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னையில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க 400 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும் சென்னையில் மாஸ்க் அணியாமல் பொதுவெளியில் சென்றால் ரூ.200 அபராதமும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.