செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 ஜூலை 2022 (16:23 IST)

முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம்; நாளை முதல் அமல்! – சென்னை மாநகராட்சி!

சென்னையில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000க்கும் மேல் பதிவாகியுள்ளது.

இதனால் சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.