ரஜினியை விமர்சித்த ரோஜாவுக்கு சந்திரபாபு நாயுடு கண்டனம்..!
ரஜினிகாந்தை விமர்சனம் செய்த அமைச்சர் ரோஜாவுக்கு முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சமீபத்தில் முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் என்டி ராமராவ் நூறாவது பிறந்தநாள் விழாவில் சந்திரபாபு குறித்து பெருமையாக ரஜினிகாந்த் பேசினார். இதற்கு பதிலடி கொடுத்த நடிகையும் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா ரஜினிக்கு தெலுங்கு மாநில அரசியல் குறித்து தெரியாது என்றும் ரஜினிக்கு தெலுங்கு மாநில அரசியல் அறிவு இல்லை என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்
இந்த விமர்சனத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு நடிகர் ரஜினிகாந்திடம் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வாய்க்கொழுப்பு எடுத்து பேசும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களை ஜகன்மோகன் ரெட்டி கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Siva