ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 26 ஏப்ரல் 2023 (13:37 IST)

நடிகைகளுக்கும் சமமான சம்பளம்… மதுபாலாவின் கோரிக்கை!

தமிழ் சினிமாவில் 90 களின் தொடக்கத்தில் உச்ச நடிகையாக இருந்தவர் மதுபாலா. பாலச்சந்தர், மணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய இயக்குனர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். ஆனால் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார். பல வருடங்களுக்குப் பின்னர் வாயை மூடி பேசவும் திரைப்படத்தின் மூலம் ரி எண்ட்ரி கொடுத்தார். இப்போது தலைவி உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது சினிமாவில் சம்பள விஷயத்தில் ஆண் பெண் பாகுபாடு இருப்பது குறித்து பேசியுள்ள அவர் “நான் சினிமாவில் நடிக்க தொடங்கிய போது ஹீரோக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் இருக்கும்.  ஆனால் இப்போது அப்படி இல்லை. கதையை நகர்த்தும் வேடங்களில் பெண் நடிகர்களும் நடிக்கிறார்கள்.  அப்படிப்பட்டவர்களுக்கு கதாநாயக நடிகர்களுக்கு இணையாக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.