வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 15 அக்டோபர் 2018 (09:31 IST)

புழல் சிறையா? சுற்றுலாத் தலமா?

புழல் சிறையில் நடத்திய அதிரடி சோதனையில் 10 கிலோ பிரியாணி அரிசி மூட்டையும் சொல்போன்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்ட  கைதிகள் சொகுசாக வாழ்ந்து வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியானதையடுத்து, டிஐஜி முருகேசன் தலைமையிலான போலீஸார்  சோதனை செய்தபோது அங்கு உயர்ரக  டிவி, அரிசி, கட்டில் போன்றவை சிக்கியுள்ளது.

அதையடுத்து சில தினங்களுக்கு பிறகு சிறையில் கைதிகள் பிரியாணி சமைப்பது போன்ற வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. அந்த சர்ச்சை அடங்குவதற்குள் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.

நேற்று திடீரென் சிறைத்துறை அதிகாரிகள் புழல் சிறையில் சோதனை நடத்திய போது 10 கிலோ பிரியாணி அரிசி மூட்டைகள் மற்றும் ஒரு கைதியிடம் இருந்து செல்போன் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. விமலநாதன் என்ற அந்த கைதி குளியலறையில் செல்போன் பேசிக்கொண்டிருந்த போதே பிடிக்கப்பட்டுள்ளார்.

குற்ற சம்பவங்களில்   ஈடுபட்டு, குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு கூறப்பட்டு அவர்கள்  செய்த குற்றத்துக்கு  தன்னை மனதளவில் திருத்திக் கொள்வதற்காகத்தான்  சிறையில் அடைக்கப்படுவது. ஆனால் இதற்கு மாறாக சில வசதியான கைதிகள் சிறைத்துறை அதிகாரிகளைக் கையில் போட்டுக்கொண்டு,ஜெயிலுக்கு வந்து தண்டனை காலத்தில் விருந்தினர் போல அனைத்து சொகுசு வசதிகளையும் பெற்று வருகின்றனர் என்ற அச்சமே மக்கள் மனதில் உண்டாகியுள்ளது.

தொடர்ந்து இது போன்ற சர்ச்சைகளில் புழல் சிறை நிர்வாகம் சிக்குவது அது சிறைச்சாலையா அல்லது சுற்றுலாத்தலமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.