புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 அக்டோபர் 2018 (13:43 IST)

கோலமாவு கோகிலா நயன்தாராவாக மாறிய இளம்பெண்: சென்னையில் ருசிகரம்

கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாரா போதைப்பொருளை கடத்துவது போல, சென்னையில் ஒரு இளம்பெண் கள்ளநோட்டை மாற்றி மாட்டிக்கொண்டார். 
 
சமீபத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்தில், ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்யும் நயன்தாரா குடும்ப சூழ்நிலையில் காரணமாக போதைப்பொருள் கடத்தும் தொழிலை செய்வார். இப்படத்தில் வருவது போல் சென்னையில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது
 
சென்னை சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையை சேர்ந்த வனிதா(22) என்ற இளம்பெண் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோரில் வேலை செய்து வருகிறார். வனிதாவிற்கு கள்ளநோட்டு மாற்றும் கும்பலிடம் அறிமிகம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வறுமையில் தவித்து வந்த வனிதா, அந்த கும்பலின் மயக்கும் பேச்சை கேட்டு கள்ளநோட்டுகளை மாற்ற முடிவு செய்தார்.
 
அதன்படி அவர் ஒரு மருந்துகடையில் 2000 ரூபாய் கள்ளநோட்டை மாற்ற முயற்சித்த போது போலீஸில் மாட்டிக்கொண்டார். போலீஸார் வனிதாவிடம் விசாரித்ததில் குடும்ப சூழ்நிலை காரணமாக இப்படி செய்ததாகவும், இதன் பின்னணியில் ஆளும்கட்சி பிரமுகர் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். வனிதாவை கைது செய்த போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகினறனர்.