புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: திங்கள், 21 டிசம்பர் 2020 (23:13 IST)

ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்த பிரபல கட்சி ! ரசிகர்கள் அதிர்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் விரையில் புதிதாக கட்சி தொடங்கவுள்ளார். இந்நிலையில் அவர் தொடங்கவுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி எனப் பதிவு செய்தால் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர உள்ளதாக அகில் இந்திய மக்கள் சேவை இயக்கத் தலைவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

நடிகர் ரஜினிகாந்த் தொடங்கவுள்ள கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என்று  பெயர் வைக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. இந்தப் பெயரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்கு சேவை செய்து வருகிறோம். ரஜினி தனது கட்சிக்கு மக்கள் சேவை கட்சி எனப் பெயர் வைத்தால் அது மக்களுக்கு குழப்பும். அதனால் ரஜினி கட்சிப் பெயரை மாற்றிக்கொள்ள வேண்டும் என இன்றைய கூட்டதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனவும் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது எனவும் கூறியுள்ளார்.