புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 16 மார்ச் 2019 (11:53 IST)

பொள்ளாச்சி விவகாரம்: பேஸ்புக், வாட்ஸ்ஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள்!!!

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேஸ்புக், வாட்ஸஆப் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி வேண்டுகோள் விடுத்துள்ளது.
 
பொள்ளாச்சி பாலியல் விவகாரம் நாடெங்கிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி வேண்டும் என போராடி வருகின்றனர். இவ்வழக்கு சம்மந்தப்பட்ட வீடியோ பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் பரவி வருகிறது.
 
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி, பேஸ்புக், வாட்ஸப் நிறுவனங்களுக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கு சம்மந்தமாக பேஸ்புக் மற்றும் வாட்ஸஆப்பில் வீடியோ பரவுவதை தடுக்கவும், அதனை டெலிட் செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.