ஓவர் ஸ்பீடில் கார் ஓட்டிவந்து விபத்து.. தொழிலாளி மரணம்! மாப்பிள்ளை கைது...

accident
Last Updated: புதன், 11 செப்டம்பர் 2019 (19:13 IST)
அவசர உலகில் இன்று யாருக்குத் தான்,எதற்குத்தான் அவசரமில்லை. அதிவேகமாக உலகில் தாங்களும் அதிவேகத்தில் பயணத்தில் செல்வது நாட்டில் வாடிக்கையாகி வருகிறது. மோட்டார் வாகனச் சட்டத்தை திருத்தி, அபராதம் விதித்தாலும் சிலர் இவ்விதிகளை மீறுவது ஆரோக்கியமான விஷயமல்ல. இந்நிலையில் இன்று, மதுரையில் காரை வேகமாக ஓட்டிவந்த மாப்பிள்ளை, ஒரு தொழிலாளி மீது மோதியதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மதுரை மாவட்டம் கோமதிபுரத்தில், இன்று, தமிழரசன் என்ற தொழிலாளி சாலையைத் தூய்மை செய்து கொண்டிருந்தார். அப்போது அதிவேகத்தில் வந்த கார், தொழிலாளி மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர்கள், உடனடியாக  சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கிருந்த, இறந்த, தமிழரசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 
 
பின்னர், போலீஸார் ,  காரை ஓட்டிவந்த நபரை விசாரித்தனர். அதற்கு,  அந்த நபர், தனது பெயர் ஜெகந்நாதன் என்றும், இன்று தனக்குத் திருமணம் நடக்கவுள்ளதாக தெரிவித்தாகவும் தகவல் வெளியாகிறது.

அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், இதுகுறித்து அவரிடம் விசாரித்துவருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 


இதில் மேலும் படிக்கவும் :