1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (14:59 IST)

சென்னை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய புரோக்கர்.. ஐதராபாத்தில் கைது..!

Arrest
சென்னை பள்ளி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய புரோக்கர் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய குற்றத்திற்காக ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்ட போது அவருடைய நட்பு வட்டாரத்தில் இருந்த நதியா என்ற பெண், சென்னை  பள்ளி மாணவிகளை மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலுக்கு தள்ளிய ஆதாரங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இந்த தகவல்களை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு என்.ஐ.ஏ அதிகாரிகள் அனுப்பிய நிலையில் மத்திய குற்றப்பிரிவில் செயல்படும் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணையை தொடங்கினர்.

விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியான நிலையில் சென்னையை சேர்ந்த நதியா என்பவர் தான் சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் நதியா அவருடைய கூட்டாளிகள் உள்பட 10 பேரை போலீசார்  கடந்த ஜூன் மாதம் கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி ஆன சஞ்சய் குமார் என்ற புரோக்கரை போலீசார் தேடி வந்த சில நிலையில் அவரும் தற்போது ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.


Edited by Siva