வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2020 (16:05 IST)

மணப்பெண்ணை ஏற்றுக் கொள்கிறேன்....சிஏஏ - வை நிராகரிக்கிறேன் - போராட்டத்தில் திருமணம் செய்த இளைஞர் !

மணப்பெண்ணை ஏற்றுக் கொள்கிறேன்....சிஏஏ - வை நிராகரிக்கிறேன் - போராட்டத்தில் திருமணம் செய்த இளைஞர்

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் ( சிஏஏ )குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நான்காவது நாளாக நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது தம்பதிகளுக்கு இஸ்லாம் முறைப்படி திமணம் செய்து வைக்கப்பட்டது.
 
கடந்த வருடம் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது.  அதன்பிறகு, வண்ணாரப்பேட்டையில் இரவில் சிஏஏ (CAA )மற்றும் என்.பி.ஆர் (NPR)எதிர்த்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதலை கண்டித்து இசுலாமிய அமைப்புகள் இன்று நான்காவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இன்று நடைபெற்றுவரும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்  தொடரின் போது கூட இதுகுறித்து முதல்வர் பேசியிருந்தார்.
 
இந்நிலையில்,இன்று நடைபெற்று வரும் போராட்டத்தின்போது, ஒரு இஸ்லாமிய குடும்பத்தினரான்ப ஷயின்ஷா, சுமையா ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. அப்போது, கூட்டத்தில் பேசிய, மணமகன்  மற்றும் மணமகள்  தங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது; ஆனால் குடியுரிமை திருத்தச் சட்டம் பிடிக்கவில்லை என கூறினர்.