1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 15 ஜூலை 2018 (09:38 IST)

தமிழகத்தில் பாஜக இமாலய வெற்றி அடையும் - பொன்னார் உறுதி

தமிழகத்தில் மெஜாரிட்டியான இடங்களைப் பிடித்து பாஜக இமாலய வெற்றி அடையும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
21 மாநிலங்களை தங்கள் வசம் வைத்துள்ள பாஜக தமிழகத்தில் எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டும் என மூட்டி மோதிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் கூட பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா சென்னைக்கு வந்து தங்களது கட்சித் தொண்டர்களிடையே உத்வேகத்தை ஏற்படுத்தி விட்டு சென்றார்
 
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மக்களுக்கு தேவையான நல்ல திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தி வருகிறது. 
 
தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருக்கிறது என அமித்ஷா கூறியதற்கு அதிமுக எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார் .மேலும் அவர் ஊழலை ஒழிப்பதாக கூறிக்கொண்டிருக்கும் பாஜக ஏன் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதுகுறித்து பொன்னார் பேசுகையில் யாரையும் கண்ணை மூடிக்கொண்டு உடனடியாக கைது செய்ய முடியாது. ஊழல் செய்தவர்கள் தப்பாத வகையில் மத்திய அரசின் நடவடிக்கை இருக்கும் என்றார்.
 
மேலும் மத்திய அரசின் உன்னதமான சாதனைகளால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகப்படியான இடங்களில் வெற்றி பெற்று முதல் கட்சியாக இருக்கும். அதேபோல் தமிழகத்தில் பாஜகவின் இமாலய வெற்றியை வரும் சட்டமன்ற தேர்தலில் மக்கள் பார்ப்பார்கள் என்றார் பொன்னார்.