தமிழகத்திற்கு அதிகரிக்கும் தண்ணீர் வரத்து: காவிரி பிரச்சனைக்கு பிரேக்!!

Last Modified சனி, 14 ஜூலை 2018 (19:00 IST)
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால், காவிரி மேலாண்மை ஆணையம் கூறாமலேயே கர்நாடக முதல்வர் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட உத்தவிட்டார். அதன்படி தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.  
 
ஏற்கனவே, கர்நாடக அணையான கிருஷ்ணராஜா அணை, அதன் முழுக்கொள்ளளவான 124.80 கன அடியில் 110.40 அடியை எட்டியிருந்தது. ஆனால், தற்போது 123 அடி தண்ணீர் உள்ளது.
 
இதனால், கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று இரவில் மேலும் 20 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வாய்ப்பு உள்ளது என தெரிகிறது. 
 
கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக மத்திய நீர்வளத்துறை தமிழகத்திற்கு எச்சரிக்கை விடுத்தது. அதன்படி மாநில அரசுகளும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :