வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 பிப்ரவரி 2024 (13:20 IST)

தேமுதிக டீலுக்கு ஓகே சொன்ன பாஜக? விரைவில் கூட்டணி அறிவிப்பு!

Premalatha Vijayakanth
நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க தேமுதிகவின் நிபந்தனைகளுக்கு பாஜக தரப்பில் சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.



நாடாளுமன்ற தேர்தலுக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் தமிழ்நாடு அரசியலில் இப்போதே பரபரப்பு அதிகரித்துள்ளது. திமுக ஒருபக்கம் தோழமை கட்சிகளோடு நிற்க மறுபுறம் பாஜக, அதிமுக தனித்தனியாக பிரிந்து நிற்பதால் ஒரு மும்முனை போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக, அதிமுக கூட்டணி பிரிந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முன் வராதது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவிற்கு அனைத்து தொகுதிகளிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் என வலுவான கட்டமைப்பு உள்ளதால் குறைவான தொகுதிகளே வழங்குவார்கள் என்பதால் பலரும் பாஜகவுடன் கூட்டணிக்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.


தேமுதிகவை பொறுத்தவரை கள்ளக்குறிச்சி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட தாங்கள் வலிமையை காட்ட சரியான 4 தொகுதிகளும், 1 மாநிலங்களவை சீட்டும் தர முன் வந்தால் கூட்டணிக்கு தயார் என்ற நிலைதான் இருந்தது. இந்த தேர்தலில் தேமுதிக தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயமும் உள்ளது. இந்நிலையில் தேமுதிகவின் டிமாண்டுகளுக்கு பாஜக தரப்பில் பச்சைக் கொடி காட்டப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.

பிப்ரவரி 7ம் தேதியன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் தேர்தலில் போட்டியிடுவது குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதன்பின்னர் அதிகாரப்பூர்வமாக பாஜக – தேமுதிக கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K