செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 11 டிசம்பர் 2018 (17:49 IST)

தேர்தல் எதிரொலி; பாஜக செல்வாக்கை இழந்தது: ரஜினி கமெண்ட்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ராஜஸ்தான், மத்திடபிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்று இன்று வாக்கு எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன.
 
தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட்சி அமைக்க உள்ளார். மிசோரமில் மிசோ தேசிய கட்சி ஆட்சி அமைக்க உள்ளது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரின் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் முடிவுகள் காங்கிரஸ் பக்கம் சாயுமா அல்லது பாஜக வசம் செல்லுமா என்ற இழுபறி நிலவி வருகிறது.
 
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் விமான நிலையத்தில் இது குறித்து கேட்ட போது, ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்தார். அதோடு பாஜக தனது செலவாக்கை இழந்ததையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுவதாக தெரிவித்தார். 
 
இதற்கு முன்னர் ஒருவரை பலர் எதிர்த்தால் யார் பலசாலி என கேட்டு பாஜகவிற்கு ஆதரவாக பேசுவது போல் பேட்டி அளித்திருந்த நிலையில் இப்போது இவ்வாறு கூறியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.