1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 13 பிப்ரவரி 2019 (16:45 IST)

நோட்டு கொடுத்து நோட்டாவுடன் வெற்றி: திமுகவை வம்புக்கு இழுக்கும் தமிழிசை

தமிழகத்தில் தாமரையை மலரவைக்க தமிழக பாஜக தலைவர்கள் முதல் தேசியத் தலைவர்கள் வரை அனைவரும் கடுமையாகப் போராடி வருகின்றனர். ஆனால் தாமரை மலர்வதற்கான எந்த அறிகுறியும் இதுவரைத் தெரியவில்லை. 
 
இந்நிலையில் தனது பலத்தை தமிழகத்தில் அதிகரிக்க கூட்டணி எனும் ஆயுதத்தை எடுத்துள்ளது பாஜக. அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை கொண்ட கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் தங்களுக்கென்று சில எம்.பி.களை தமிழகத்தில் உருவாக்கிக்கொள்ள பாஜக முயன்று வருகிறது. இந்நிலையில் தேர்தல் கூட்டணி குறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியது பின்வருமாறு, 
 
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டால் பாஜகவும் தனித்துப் போட்டியிடத் தயார். பாஜக நோட்டாவுடன்தான் போட்டி போடும். அவர்கள் மட்டும் நோட்டாவுடன் போட்டி போடக் கூடாது என்று பல கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து இருக்கிறார்கள் என்று தலைவர் வீரமணி பேசியுள்ளார். 
தேர்தலையே சந்திக்காத வீரமணி இதை பேசுவதற்கு தகுதியற்றவர். திமுக ஆர்.கே நகர் தொகுதியில் டெபாசிட் இழந்தது. அப்படி என்றால் திமுக டெபாசிட் இழந்த கட்சி என்று நாங்கள் அழைக்கலாமா? 
 
நோட்டு கொடுத்து நோட்டாக்கு மேல் வாக்குகளை பெறுவது பெருமை அல்ல. இதே திமுக ஆர்.கே.நகரில் டெபாசிட் இழந்தது என்பதை வீரமணி அவர்கள் நினைவில் வைத்துக் கொண்டு அரசியல் நாகரீகத்தோடு பேச வேண்டும் என கடுப்பாக பேசியுள்ளார்.