புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2021 (20:23 IST)

பாஜக பிரமுகர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது !

இஸ்லாமிய இறைத்தூதர் முகமது நபியை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாஜக கல்யாணராமன் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது, கோவை மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் கல்யாணராமனை குண்டர் சண்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

மேட்டூரில் நடந்த கூட்டம் ஒன்றில் முகமது நபியை இழிவாக பேசிய வழக்கில் பாஜக கல்யாணராமன் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின்போது மத விரோதத்தினை தூண்டும் வகையில் முகநூலில் பதிவிட்டதாக கோவை ரத்தினபுரி போலீஸார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

அந்த வழக்கின் பேரில் கல்யாணசுந்தரம் மீண்டும் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது  நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் கல்யாணராமன் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோவை மாவட்ட எஸ்.பி. பரிந்துரை பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.