வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 பிப்ரவரி 2022 (11:21 IST)

ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர்! – வெளியேற்றிய தேர்தல் அதிகாரிகள்!

மேலூர் நகர்புற உள்ளாட்சி தேர்தல் சாவடியில் பெண்ணின் ஹிஜாபை அகற்ற சொன்ன பாஜக முகவர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

தமிழக நகர்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் பலர் காலை முதலே ஆர்வமாக தனது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மேலூர் நகராட்சி 8வது வார்டு வாக்கு சாவடியில் வாக்களிக்க இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார். அவரை ஹிஜாபை அகற்றும்படி வாக்குச்சாவடியில் இருந்த பாஜக முகவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அந்த பெண் மறுத்த நிலையில் பிற கட்சி முகவர்கள் பாஜக முகவரின் செயலை கண்டித்துள்ளனர். பின்னர் தேர்தல் அதிகாரிகள் பாஜக முகவரை வெளியேற்றியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு எழுந்துள்ளது.