பெண் வங்கி அதிகாரியை கர்ப்பமாக்கிய ஓட்டல் ஊழியர்: போலீசில் புகார்..!
வங்கியில் பணிபுரியும் பெண் அதிகாரியை கர்ப்பம் ஆக்கிய ஹோட்டல் ஊழியர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த 27 வயது பெண் தனியார் வங்கியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வரும் நிலையில் அவருக்கும் 27 வயது வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. மாலத்தீவில் உள்ள ஒரு ஓட்டலில் அந்த வாலிபர் செப் ஆக இருக்கும் நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.
இந்த நிலையில் தனது காதலருடன் ஒரு சில தங்கும் விடுதிகளில் வங்கி அதிகாரி தங்கிய நிலையில் அவர் கர்ப்பமாகி உள்ளார். இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ஹோட்டல் ஊழியரை அவர் கேட்டபோது தன்னால் திருமணம் செய்ய முடியாது என்றும் நீ கருவை கலைத்து விடும் என்றும் கூறியதால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதுமட்டுமின்றி 5 லட்ச ரூபாய் பணம் மற்றும் 10 பவுன் நகை ரொக்கமாக வரதட்சணை கொடுத்தால் தான் திருமணம் செய்வேன் என்று கூறியுள்ளார். இதனை அடுத்து தன்னை கட்டாயப்படுத்தி பாலில் பலாத்காரம் செய்து கர்ப்பம் ஆக்கிவிட்டதாக பெண் வங்கி ஊழியர் போலீசில் புகார் அளித்துள்ளதை அடுத்து ஹோட்டல் ஊழியர் மீது மூன்று பிரிவுகளின் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
Edited by Siva