திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (21:41 IST)

வகுப்பறையில் கருக்கலைக்க முயன்ற மாணவி உயிரிழப்பு....

abuse
ஆந்திர மாநிலம் நெல்லூரி கல்லூரி மாணவி ஒருவர் வகுப்பறையில்  கருக்கலைக்க முயன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


ஆந்திர மாநில  நெல்லூரில் மரிபாடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி( 19 வயது). அவர்  தனியார் கல்லூரியில் பிடெக் படித்து வந்தார். இம்மாதம் 11 ஆம் தேதி அனைத்து மாணவ்ர்களும் கல்லூரி வளாகத்தில் வகுப்பிற்கு வெளியே வந்தனர்.

அப்போது, இந்த மாணவி மட்டும் வகுப்பறையில் தனியே இருந்துள்ளார்.  நீண்ட நேரமாகியும் மாணவி வெளியே வராததால், சக மாணவிகள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றபோது, ரத்த வெள்ளத்தில் மாணவி கீழே துடித்துக் கொண்டிருந்தார்.

உடனடியாக மாணவிகள் அவரை மீட்டு  மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

மாணவி, யூடியூப்பை பார்த்து தனக்கு தானே கருச்சிதைவு செய்துகொள்ள முயன்றாரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.