1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (19:23 IST)

நீட் தேர்வை தமிழக அரசால் நிறுத்த முடியாது: முன்னாள் துணைவேந்தர்

நீட் தேர்வை தமிழக அரசால் 100% தடுக்க முடியாது என்றும் தமிழக அரசின் பேச்சை நம்பாமல் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்றும் முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பாலகுருசாமி தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வு விஷயத்தில் தமிழக அரசு அரசியல் செய்கிறது என்றும் நீட்தேர்வு தடுக்க முடியாது என்று தமிழக அரசுக்கும் அரசியல்வாதிகளுக்கும் நன்றாக தெரியும் என்றும் இருப்பினும் மாணவர்களை குழப்பி வருகின்றனர் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்
 
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் நீட்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்றும் தமிழக அரசு உட்பட யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்படுவது போல் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வாய்ப்பே இல்லை என்றும் எனவே மாணவர்கள் அரசியல்வாதிகளின் பேச்சை நம்பாமல் நீட் தேர்வுக்கு தயாராவது இதுதான் சரியான வழி என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்