திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 12 ஜூலை 2021 (19:07 IST)

நீட் தேர்வு குறித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் கருத்து!

செப்டம்பர் 12 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் கூறியுள்ள நிலையில் இந்த தேர்வு நடத்தப்படுவது குறித்து தமிழக அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தனது கருத்தை தெரிவித்துள்ளார்
 
நீட் தேர்வு குறித்த வழக்கு நாளை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது என்றும் இந்த வழக்கை பொறுத்துதான் நீட் விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுக்கும் என்றும் தெரிவித்தார். மேலும் நீட் தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று கூறிய சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அவர்கள் மாணவர்களுக்கு தமிழக அரசால் நீட் தேர்வுக்கான பயிற்சி தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார் 
 
மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவது தவறு இல்லை என்று அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார். சென்னை ஐகோர்ட்டில் நீட் தேர்வு குறித்த வழக்கில் நாளை என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்