வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (18:40 IST)

8 வயது சிறுமி வன்கொடுமை வழக்கு; அசாம் இளைஞர் கைது

சிவகாசியில் 8 வயது சிறுமி வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிவகாசியில் கொங்களாபுரம் பகுதியை சேர்ந்த சுந்தரம் என்பவரின் 8 வயது மகள், கடந்த 20 ஆம் தேதி காணமல் போன நிலையில், அதற்கு அடுத்த நாள் காலை சுந்தரம் வீட்டின் அருகே முட்புதர்களுக்குள் சிறுமி இறந்து கிடந்தாள். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து 5 தனிப்படை போலீஸார்கள் விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து அசாம் மாநிலத்தை சேர்ந்த 6 பேரிடம் போலீஸார் விசாரனை நடத்தினர். தற்போது தனிப்படை போலீஸார் இவ்வழக்கில் அசாம் மாநிலத்தை சேர்ந்த மஜம் அலி என்ற இளைஞரை கைது செய்துள்ளனர்.