1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (13:27 IST)

சட்டசபை தேர்தலுக்கு தயாரான கமல்ஹாசன்...மக்களை சந்திக்க திட்டம் !

தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.
கடந்த வருடம் மே மாதத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கு , கிராமங்கள் தோறும் சென்று கிராம மக்கள் சபை கூட்டத்தைக் கூட்டிய கமல்ஹாசன், மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
 
அதன் பின் திமுக தலைவர் ஸ்டாலினும் அதேபோன்று கிராமங்கள் தோறும் சென்று மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். அதன்பின் இருவருக்கும் வார்த்தைப் போர் மூண்டது. மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட அவரது கட்சி சுமார் 4 % வாக்குகளைப் பெற்றது.
 
இந்நிலையில்,அடுத்த வருடம் தமிழகத்தில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈடுபாடு காட்டிவருகிறார். அடுத்தமாதம் முதல் பிரச்சாரமும் மேற்கொள்வார் என தெரிகிறது. 234 சட்டசபை தொகுதிகளிலும் மக்கள் சந்திப்பு பயணம் தொடங்க திட்டமிட்டுள்ள கமல்ஹாசன் அதற்கான வியூகங்களை வகுத்து வருகிறார்.
 
எனவே, சமீக காலமாக , கமல்ஹாசன் நடித்த  எந்தப் படங்களும் வெளிவரவில்லை; எனவே அவர் தீவிர அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால் அவர், சமீபத்தில் நடைபெற்ற கிராம் உள்ளாட்சி மன்ற தேர்தலில் அவரது கட்சி போட்டியிடவில்லை. 
 
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.ஜி.மவுரியா கூறியதாவது :
 
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்யவுள்ளார்.அப்போது மக்களையும் சந்திக்க திட்டம் தயாராகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.