தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும்: அர்ஜூன் சம்பத்
தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே தமிழகத்தை தமிழ்நாடு, கொங்குநாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என ஏற்கனவே ஒரு சிலர் குரல் கொடுத்து வருகின்றனர் என்பதும் இதற்கான முயற்சிகளை பாஜக எடுத்து வருகிறது என்றும் கூறப்படுகிறது
இந்த நிலையில் தமிழகத்தை 3 மாநிலமாக பிரிக்க வேண்டும் என அர்ஜுன் சம்பத் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது நி
தனித்தமிழ்நாடு என்ற பிரிவினை வாதம் தவறானது என்றும் ஆனால் நிர்வாக வசதிக்காக தமிழகத்தை மூன்றாக பிரிப்பதில் எந்தவித தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்
தமிழகம் விரைவில் பிரிக்கப்படுவது உறுதி என்றும் ஆனால் அது இரண்டு அல்லது மூன்று என்பதுதான் தற்போது பிரச்சினை இருப்பதாகவும் பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன