புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : சனி, 9 ஜூலை 2022 (08:04 IST)

தமிழகத்தில் நாளை மெகா தடுப்பூசி மையம்: சுகாதாரத்துறை அறிவிப்பு!

vaccine
தமிழகம் முழுவதும் நாளை ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் அமைக்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று 2700 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி மையம் நடைபெறுகிறது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை சமீபத்தில் முடிவு செய்த நிலையில் நாளை தடுப்பூசியும் நடைபெற உள்ளது 
 
ந்த தடுப்பூசி மையத்தை பயன்படுத்தி இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் செலுத்திக் கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்