வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (05:33 IST)

அர்ஜூன் சம்பத் அடுத்த சங்கராச்சாரியரா? திடுக்கிடும் தகவல்

காஞ்சி சங்காராச்சாரியார் தற்போது உடல்நலமின்றி இருப்பதால் அடுத்த சங்கராச்சாரியாரை விரைவில் தேர்வு செய்ய முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்ப்புலிகள் என்ற அமைப்பு அடுத்த சங்கராச்சாரியராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஆனால் அர்ஜூன் சம்பத் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். சங்கராச்சாரியர் நியமனம் என்பது புனிதமான விஷயம். சங்கராச்சாரியர் பதவிக்கு நான் பொருத்தமானவன் அல்ல. எனக்கு இந்து சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் எண்ணம் மட்டுமே உள்ளது, சங்கராச்சாரியர் ஆகும் ஆசை இல்லை

சங்கராச்சாரியரை சாதாரணமாக தேர்வு செய்ய முடியாது. ஜாதகம் பார்த்து பல்வேறு விதமான ஆன்மீக பயிற்சி கொண்ட ஒருவரைத்தான் தேர்வு செய்யவேண்டும். எனவே என்னை சங்கராச்சாரியராக நியமனம் செய்ய வேண்டும் என்ற விஷமத்தனமான கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.